+94 777 238 019 iasl@isplanka.lk

News & Events

  • மிகச் சிறந்த கல்வித் திட்டங்களுடன் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு அனைத்துப் பெற்றோரையும் இலங்கை காப்புறுதிச் சங்கம் அழைக்கின்றது

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு மிகச்சிறந்த கல்வியை வழங்கவும், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை நிறைவேற்றவும் விரும்புகிறார்கள். அதிகரித்து வரும் கல்விச் செலவைக் கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் உயர்கல்விக்கு பணம் செலுத்துவதற்கு அல்லது நேரம் வரும்போது பிள்ளையை வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்கு ஒரு முறையான திட்டத்தை வைத்திருக்க வேண்டும். இருப்பினும், தமது பிள்ளையின் எதிர்காலத்திற்கான சிறந்த சேமிப்புத் திட்டத்தைக் கண்டறிவதில் வளர்ந்தவர்கள் கூட குழப்பத்திற்கு ஆளாகலாம். இதற்காகவே சிறுவர் காப்புறுதித் திட்டம் உள்ளது. இது உங்கள் பிள்ளையின் உயர் கல்வி அபிலாஷைகளுக்கு பாதுகாப்பையும், சேமிப்பையும் உறுதி செய்கின்றது.

இலங்கை காப்புறுதிச் சந்தையில், ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவற்றின் அடிப்படையில், காப்புறுதியைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. இத்தகைய நெருக்கடியான சூழலில், பிள்ளைகளை மேல்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவது கனவாகவே இருக்கும். இருப்பினும், பெற்றோர்கள் கல்விக் காப்புறுதித் திட்டமொன்றைப் பெற்றுக்கொள்ளும் போது, அவர்கள் தமது பிள்ளைகளின் தொழில்வாழ்க்கைக் கனவுகளை நனவாக்கின்றனர்.

கல்விக் காப்புறுதித் திட்டங்கள் உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு நாட்டிற்குள் அல்லது வெளிநாட்டிற்கு நிதியளிக்க வேண்டியிருக்கும் போது, பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பிட்ட தொகையை முற்கூட்டியே முதலீடு செய்துகொள்ள உதவுவதுடன், இதன் மூலம் பெற்றோரையும் ஒரே நேரத்தில் பெரிய தொகையை செலவு செய்ய வேண்டிய நிலைமையிலிருந்து பாதுகாக்கின்றது. பொருளாதார நெருக்கடியின் போது காணப்பட்ட நிச்சயமற்ற தன்மைகள் நீண்ட காலத்திற்கு நிதி திட்டமிடல் தேவையை நம்மத்தியில் ஏற்படுத்தின.

குறிப்பாக கல்விச் செலவுகள் முடங்கும் நிலைமை மற்றும் சாதகமற்ற நாணய மாற்று வீதம் என்பது உங்கள் பிள்ளைகளை அவர்களின் கனவாக அமைந்த பல்கலைக்கழகங்களில் கல்வியை முன்னெடுக்க வெளிநாடுகளுக்கு அனுப்புவது என்பது நிதியியல் ரீதியாக ஒரு சவாலான பணியாக இருக்கும். நீங்கள் எதிர்காலம் தொடர்பில் ஆழமாக சிந்தித்து கல்விக் காப்புறுதியை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அது நிச்சயமாக குடும்பத்தை நிதி நெருக்கடிக்கு ஆளாக்கும். கல்விக் காப்புறுதித் திட்டத்தின் சில நன்மைகள்: பெற்றோரின் அகால மரணம் மற்றும் இயலாமை ஏற்பட்டால், காப்புறுதி நிறுவனம் உங்கள் சார்பாக உங்கள் கட்டுப்பணத்தைத் தொடர்ந்து செலுத்தும். இது நீங்கள் இல்லாவிட்டாலும் கூட நீங்கள் திட்டமிட்ட கல்வி நிதியை உங்களது பிள்ளை பெற்றுக்கொள்வதை உறுதி செய்கின்றது. தனித்துவமான ஆதாயப்பங்கு முறைமை உங்கள் நிதி தொடர்ந்து அதிகரிப்பதை உறுதிசெய்வதுடன், முதிர்ச்சியின் போது கணிசமான கல்வி நிதியையும் மற்றும் உங்கள் பிள்ளைக்கு ஆயுள் காப்புறுதியையும் வழங்குகின்றது. உங்கள் பிள்ளைக்கான கல்வி நிதியானது நிறுவனம் மாதந்தோறும் அறிவிக்கும் திரட்டிய வீதத்தின் அடிப்படையில் அதிகரித்துச் செல்லும். காலத்தின் முடிவில் காப்புறுதியாளர் நிதியை மொத்தமாகப் பெற்று அதைத் தமது பிள்ளையின் பல்கலைக்கழகக் கல்விக்காகப் பயன்படுத்தலாம்.

இன்றைய அதிக போட்டி நிறைந்த உலகில், பிள்ளைகள் தமது தொழில் வாழ்வு அபிலாஷைகளை நனவாக்க அவர்களது இளம் வயதிலேயே கல்வித் திட்டங்களில் முதலீடு செய்ய போட்டித்தன்மையும் பெற்றோரின் தூரநோக்குடனான சிந்தனையும் தேவைப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு இதுவே. கல்வித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நாட்டின் காப்புறுதித் துறையின் பிரதிநிதித்துவ அமைப்பான இலங்கை காப்புறுதிச் சங்கம் தமது பிள்ளைகளுக்கு முதலீடு செய்வதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் மிகவும் பொருத்தமான கல்வித் திட்டங்களை கண்டறியுமாறு பெற்றோருக்கு அழைப்பு விடுகின்றது. காப்புறுதிச் சந்தையில் பல திட்டங்கள் உள்ளன, அதில் இருந்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மிகவும் உகந்தவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அவர்களின் தத்துவம், “அறிவுக்கான முதலீடு சிறந்த பலனைக் கொடுக்கும்”.

இலங்கை காப்புறுதிச் சங்கம் தொடர்பான விபரங்கள்

இலங்கை காப்புறுதிச் சங்கம் (Insurance Association of Sri Lanka - IASL) நாட்டின் காப்புறுதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாகும். இது 1989 இல் உருவாக்கப்பட்டது. காப்புறுதி வியாபாரத்தை முன்னெடுக்கும் அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் IASL இன் உறுப்பினர்களாக உள்ளன. தற்போது, அனைத்து 27 பதிவுசெய்யப்பட்ட காப்புறுதி நிறுவனங்களும் IASL இன் உறுப்பினர்களாக உள்ளதுடன், சங்கம் அதன் உறுப்பினர்களின் பொது அக்கறை மற்றும் நலனை பாதிக்கும் விடயங்களில் ஒத்துழைப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்க காப்புறுதியாளர்களை ஒன்றிணைக்கும் பொதுவான நோக்கத்தால் வழிநடத்தப்படுகின்றது. அத்துடன், அதன் முயற்சிகளுக்கு ஒத்ததாக, இலங்கை பொதுமக்களுக்கு காப்புறுதி மூலம் பாதுகாப்பு வழங்கும் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது.